உலர் திராட்சையை மிஸ் பண்ணாதீங்க...!
திராட்சையில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
இதில் எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சர் என்ற குடல்புண் நோய்க்கு, திராட்சை சிறந்த தீர்வாகும்.
காலையில் திராட்சைப்பழச்சாறு குடித்து வர வயிற்றுப்புண்ணுக்கு நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், சிறிதளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
உலர்ந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ளது; எலும்பு மஜ்ஜைகளிலிருந்து, ரத்தம் ஊறுவதற்கு, காய்ந்த திராட்சை உதவுகிறது.
இரவு உணவுக்கு பின் தினமும், 15 முதல் 20 திராட்சை வரை குழந்தைகள் சாப்பிட்டு வர, எலும்பு மற்றும் பற்கள் வலுப்படும்.
வாலிப வயது தாண்டி, வயோதிக வயதுக்கு வரும் பொழுது, தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின், சாப்பிட்டு வர சுறுசுறுப்பு ஏற்படும்.
அடிக்கடி சாப்பிட இதய ஆரோக்கியம் மேம்படக்கூடும்.
வளர் இளம் பெண்கள் தினமும், 10 உலர் திராட்சை சாப்பிட்டால், கூந்தல் உதிர்வு பிரச்னையிலிருந்து விடுபடலாம்.