ரிவர்ஸ் டயாபடிக் சாத்தியமா?

நீரிழிவு பாதிப்பை இயல்பு நிலைக்கு அதாவது, ரிவர்ஸ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு 'ஏ, பி, சி, டி, இ' என்ற ஐந்து விஷயங்கள் இருக்க வேண்டும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

அவற்றில் சமீபத்தில் வெளியான ஆய்வுகளின் முடிவுகளின் படி...

ஏ - ஹெச்பிஏ1சி... 3 மாத ரத்த சர்க்கரையின் சராசரி அளவு, 5 - 6 %. அதிகபட்சம் 9 % வரை இருந்தால் ரிவர்ஸ் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு மேல் இருந்தால் ரிவர்ஸ் செய்வது சிரமம்.

பி - உடல் எடை... அதிக உடல் எடையை குறைக்கலாம். இதனால் ரிவஸ் செய்வதற்கு வாய்ப்பு அதிகம். உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குறைவுதான்.

சி - சி பெப்டைன் பரிசோதனை... உடலில் இன்சுலின் அளவு இயல்பான அளவான 100 % ல் 30 ஆக குறைவாக இருந்தால் மட்டுமே சாத்தியம். வெறும் 40 % இருந்தால் ரிவர்ஸ் பண்ண முடியாது.

டி - எத்தனை ஆண்டுகள்... 5 ஆண்டுகளாக நீரிழிவு பாதிப்பு இருந்தால் பரவாயில்லை. 15 ஆண்டுகளாக இருந்தால் கணைய செல்கள் செயலிழந்து விடும். அப்போது ரிவர்சலுக்கு முயற்சிக்க முடியாது.

இ - உற்சாகம்... நீரிழிவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி செய்வது. உணவு கட்டுப்பாடு ரத்த சர்க்கரையை ரிவர்சல் செய்யும்; சிறிது சறுக்கினாலும் திரும்ப வந்துவிடும்.