டாக்டர் ஆலோசனையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தாதீங்க !
இந்தியாவின் மிகவும் கடுமையான பொது சுகாதார சவால்களில் ஒன்றாக 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் உருவாகி வருவதாக சுகாதார நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
பொதுவாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற நுண்கிருமிகளை அழிக்க வழங்கப்படும் மருந்து.
பாதிப்புகளுக்கு தகுந்தவாறு, இவற்றை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தேவைக்கு அதிகமாக இவற்றை எடுத்துக்கொள்வதால், இம்மருந்துக்கு எதிரான எதிர்ப்பு திறனை, கிருமிகள் வளர்த்துக் கொள்கின்றன.
இதனால், நோயை குணமாக்குவதில் சிக்கல்கள் எழக்கூடும். ஒரு கட்டத்தில் தற்போதுள்ள மருந்துகளுக்கு கிருமிகள் கட்டுப்படாமல் போனால் பெரும் அபாயம் ஏற்படும்.
புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உருவாகும். அதற்குள் பல உயிரிழப்புகள் ஏற்படலாம். எனவே, டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்து வாங்கக்கூடாது.
மேலும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவது மாறியுள்ளது. நோய் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு அபாயத்தை இது அதிகரிக்கிறது.
எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தடுக்க அவசர நடவடிக்கை தேவை.
இல்லாவிட்டால், 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துவிடும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
நிமோனியா, சிறுநீர் தொற்றுகளுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனற்றவை என ஐசிஎம்ஆர்.,ன் அறிக்கையை குறிப்பிட்டு சமீபத்தில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது குறிப்பிடத்தக்கது.