உங்கள் சமையல் சிறக்க நச்சுனு சில டிப்ஸ்...

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால், சுவையாக இருக்கும்; உடலுக்கும் நல்லது

ஊறுகாய் செய்யும்போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால், ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது

தோசை ஊற்றுவதற்கு முன், தோசைக்கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து, மாவை ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும்

எந்த வகை சூப்பாக இருந்தாலும், அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப் சுவையாக இருக்கும்

காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அதனுடன், ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து அரைத்து விட சாம்பார் மணக்கும்

கேரட் பாயசம் செய்து இறக்கிய பின் அத்துடன் பாதாம், 'எசன்ஸ்' சேர்த்தால், அசல் பாதாம் கீர் போல இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும் போது, ஒரு துண்டு கேரட்டை சேர்த்தால் குழம்பில் கசப்பு சுவை குறையும்.

அப்பளப் டப்பாவில் சிறிது பெருங்காய துண்டை வைத்தால், அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.