சமையலை சுவையாக்க எளிய டிப்ஸ்...

ரவா கேசரியில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும்; உடம்புக்கும் நல்லது.

பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான தின்பண்டம் இது.

தர்ப்பூசணி, வெள்ளரி துண்டுகள் , ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து அதனுடன் மிளகுத்துாள், சர்க்கரை சேர்த்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி பெறும்; உஷ்ணத்திற்கும் நல்லது.

பக்கோடாவில் கடலை மாவுக்குப் பதிலாக, பொட்டுக்கடலை மாவைப் பயன்படுத்தினால் சுவை கூடும். வயிற்றுக்கோளாறும் வராது

வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள் போட்டால் நெய் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்கும்.

உலர் திராட்சையை பன்னீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.

புளிப்பில்லாத மாங்காய்களைத் தோல் சீவி, வேக வைத்து, சர்க்கரைப்பாகுடன் அடுப்பில் வைத்துக் கிளறி, ஜாமாக செய்து சாப்பிடலாம்.