அசத்தலான சமையலுக்கு ஈஸியான டிப்ஸ்...

புளிக்கு பதிலாக தக்காளியை பிழிந்து கிடைக்கும் சாற்றை ரசம், குழம்பிற்கு பயன்படுத்தினால் வித்தியாசமாக சுவை கிடைக்கும்

இட்லி, தோசை மாவு புளிக்காமல் இருந்தால், அதன் மீது சிறிதளவு சர்க்கரையை துாவினால் போதும். நன்கு புளித்து விடும்.

வடை, பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க மாவுடன் ஒரு டீஸ்பூன் ரவை சேருங்கள்.

மாங்காயை துருவி நான்கு காய வைத்து பொடியாக்கி சேமித்து வைத்தால், புளிப்பு சுவை தேவைப்படும் உணவுகளுக்கு பயன் படுத்தலாம்.

இட்லி பொடி தயாரிக்கும்போது ஒரு கைப்பிடி கறுப்பு எள்ளை நன்றாக வறுத்து சேர்த்தால், இட்லி பொடி நல்ல மணமும் சுவையும் இருக்கும்.

வெந்தய குழம்பை தயார் செய்து இறக்கும் போது, ஒரு ஸ்பூன் எள்ளு பொடியை சேர்த்தால் குழம்பு வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.

கேக் தயாரிக்கும் போது முந்திரி, பாதாமை பாலில் சிறிது நேரம் ஊறவைத்து பயன்படுத்தினால், கேக்கில் நன்கு கலந்து, சாப்பிடும்போது உதிராமல் இருக்கும்.

இஞ்சி துவையல் செய்யும் போது உளுந்தம் பருப்பை சேர்த்து அரைத்தால் ருசியாக இருக்கும்.

வெண்டைக்காய் கார குழம்பு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் சீரக துாள் சேர்த்தால் சுவை கூடும்.