சர்க்கரைவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள் அறிவோமா!
சர்க்கரைவள்ளி கிழங்கில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகளும் உள்ளன.
மேலும் இதில் குறைந்தளவு கொழுப்புச்சத்தும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன. இவை ஆரஞ்சு, ஊதா, சிவப்பு, வெளிர் மஞ்சள், வெள்ளை நிறம் போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.
100 கிராம் கிழங்கில் நீர்: 77%, புரதம்: 1.6 கிராம், கார்போஹைட்ரேட்டுகள்: 20.1 கிராம், சர்க்கரை: 4.2 கிராம், நார்ச்சத்து: 3 கிராம், கொழுப்பு: 0.1 கிராம் உள்ளன.
இதில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியாமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை உண்பதால் தினசரி தேவை பூர்த்தியாகும்.
இவற்றில் நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை.
கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்டது. அதனால் உடல் எடை குறைக்க உதவும்.
மேலும் இதில் உள்ள ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தான போலிக் அமிலமானது இந்த கிழங்கு மூலம் கிடைக்கும்.