மின் கட்டணத்தை மிச்சப்படுத்த எனர்ஜி சேவிங் ஃபேன்களை டிரை பண்ணுங்க.
மின்விசிறிகளால் உயரும் மின் கட்டணத்தை சமாளிக்க மாற்று ஏற்பாடாக, தற்பொழுது சந்தைகளில் 'எனர்ஜி சேவிங் ஃபேன்கள்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒருவரின் மாத மின் கட்டணத் தொகையில், சராசரியாக 25% மின்விசிறிகள் ஓடுவதால் ஏற்படுகிறது.
பி.எல்.டி.சி., பிரஸ்லெஸ் டிசி மோட்டார்களில் இயங்குவதால் இவை,மின் நுகர்வை கட்டுக்குள் வைத்திருக்கக் இத்தொழில்நுட்பம் உதவும்.
இது சந்தையில் பலவிதமான டிசைன்களிலும், திறன்களில், நமக்கு ஏற்ற வண்ணங்களிலும் கிடைக்கின்றது.
மின்விசிறியின் நடுமையத்தில் சி.எப்.எல் பல்புகளும் பொருத்தப்பட்டிருப்பதால், அறைக்கு கூடுதல் விளக்குகள் தேவைப்படாது.
மேலும் இந்த மின்சார சேமிப்பு ஃபேன்கள் மூலம் நம் ஆண்டு மின் கட்டணத்தில் ரூ.3,000 வரை சேமிக்கலாம்.
ரிமோட் கண்ட்ரோல் வசதி மூலம் வேகத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது அருமையான விஷயம்.
2 ஆண்டுகளுக்கான வாரன்டியுடன் இவை, சந்தைகளில் நமக்கு ஏற்ற டிசைன்களில் கிடைக்கின்றன.