ஆங்கில புத்தாண்டு ராசிபலன் 2023
மேஷம்... பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பரிகாரம்: சிவன், பெருமாள், முருகன் கோவிலுக்கு வாரந்தோறும் செல்ல குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்... எந்த காரியங்களிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். பரிகாரம்: துர்க்கை, சிவன் மற்றும் அய்யப்பன் வழிபாடு வெற்றி தரும்.
மிதுனம்... முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் உங்களுக்கு உதவிட பலரும் முன்வருவர். பரிகாரம்: குலதெய்வம், துர்க்கையை வணங்க நன்மை அதிகரிக்கும். சனிபகவானுக்கு தீபம் ஏற்றலாம்.
கடகம்... காரியங்களில் கூடுதல் அக்கறை தேவை. மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால், பொருளாதாரம் சிறக்கும். பரிகாரம்: பைரவர், கிருஷ்ணன், முருகன் வழிபாடு சிறந்தது.
சிம்மம்... உங்களின் மனதை அழுத்திக் கொண்டுள்ள பல பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலையும் இந்தாண்டில் மேம்படும். பரிகாரம்: முருகன், ஆண்டாள், கருடாழ்வாரை வணங்க மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கன்னி... எடுத்த காரியங்களில் சராசரிக்கும் கூடுதலான வெற்றி கிடைக்கும். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். பரிகாரம்: அம்பிகை, சிவன், பெருமாள் வழிபாடு வெற்றியைத் தரும்.
துலாம்... வருமானத்தை பெருக்க நல்ல பல வழிகள் உதயமாகும். வீட்டிலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பரிகாரம் : அம்மன், நந்தி பெருமானை வணங்க காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்... நம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவதால், தொழிலில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பரிகாரம்: அய்யப்பன், முருகன் மற்றும் சித்தர்களை வழிபட முயற்சி வெற்றி பெறும்.
தனுசு... துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்; எதையும் சிந்திந்து செயல்படுவது நன்மை தரும். கவனமுடன் இருந்தால் பதவி உயர்வு, வெற்றி தேடி வரும். பரிகாரம்: முருகன், பெருமாள், சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறந்தது.
மகரம்... எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்; பயணங்கள் அதிகரிக்கலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பரிகாரம்: சந்திரன், சிவன், தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு சென்று வழிபடவும்.
கும்பம்... பணவரவு சீராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் மற்றவர் மூலம் கிடைக்கும். இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பரிகாரம்: வாரந்தோறும் முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும்.
மீனம்... பணவரவு அதிகரித்தாலும், செலவு இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிக்கும். பரிகாரம்: அம்பிகை, சனிபகவான், பைரவரை வழிபட நன்மை உண்டாகும்.