வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை

தேவையானப் பொருட்கள்: வெந்தயக்கீரை - 1 கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், சிறிய வெங்காயம் - கால் கப், மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு - தேவையானளவு.

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் மிக்சி ஜாரில் போட்டு, இதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

அதில், வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, திடமான மாவு தயாரிக்கவும்.

தோசைக்கல்லில் தேவையான எண்ணெயை தடவி, மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை ரெடி.

இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வமுடன் சாப்பிடுவர்.