உணவே மருந்து... அவரைக்காயின் ஆரோக்கிய பலன்கள்!

தினமும், உணவில், அவரைக்காய் பொரியல், கூட்டு செய்து சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை உணவில் சேர்க்கலாம்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நீரிழிவு பாதிப்பால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை கட்டுப்படும்.

இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபட உதவுகிறது.

இதில், பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், இதய நோய்களிலிருந்து, நம்மை காக்கிறது. ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.

கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், வாரம் ஒரு முறை அல்லது இருமுறை, அவரைக்காய் சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும்.