ஆஸ்துமா உள்ளவர்கள் மழைக்காலத்தில் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது..!
பருவமழை காலத்தில் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்ப்பது அவர்களுக்கு அலர்ஜியை அதிகப்படுத்தாமல் பார்த்து கொள்ளும்.
எழுந்தவுடன் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருட்களை மழைக்காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தர்பூசணி, குளிர்பானம், செயற்கை பழச்சாறுகளையும் தவிர்க்கலாம். மதிய உணவில் நீர்ச்சத்துள்ள சுரைக்காய், புடலங்காய், சௌசௌ போன்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.
பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சிகள் உட்கொள்வது ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கு நிலைமையை தீவிரமாக்கும்
இனிப்புப் பண்டங்கள், மில்க் ஸ்வீட்ஸ் ஆஸ்துமாவுக்கு நல்லதல்ல. புளி, ஊறுகாய், சட்னி, எலுமிச்சைப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். கமலா ஆரஞ்சு, திராட்சை ஆகியவற்றை மருந்து எடுக்கும் காலத்தில் தவிர்க்கலாம்.
குறிப்பாக ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கவும். கெமிக்கல், அதிக சோடியம் கொண்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
ஆஸ்துமாவிற்கு பிரச்னையை தீவிரப்படுத்தும் உணவுகளில் அதிக வாயு உள்ள பீன்ஸ் வகைகளும் சேரும். இவை வயிற்றை வீங்க செய்து சுவாசிப்பதை கடினமாக்கும்.