நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு பட்டியல்!
உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் குறைக்கவும் உண்ணும் ஒவ்வொரு உணவின் கலோரி அளவை தவறாமல் கணக்கிட வேண்டும்.
மாவுச்சத்து அதிகமுள்ள அரிசிக்கு பதிலாக சிறுதானிய வகைகளை சாப்பிடலாம். துரிதமாக செமிக்கக்கூடிய கூழ், களியைத் தவிர மெதுவாக செரிக்கக்கூடிய ரொட்டி, தோசை சாப்பிடலாம்.
வயது வித்தியாசமின்றி சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மாதத்திற்கான எண்ணெய் அளவு அரை லிட்டர் மட்டும் தான். எனவே எண்ணெய்யை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
நார்ச்சத்து அதிகமுள்ள கீரை, கொடி வகை காய்கள், நாட்டு காய்கள் பசியை அடக்கி மலச்சிக்கலை தவிர்க்கிறது. மேலும் இவை ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.
காலையில் அரசனைப் போலவும். மதியம் இளவரசனைப் போலவும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைவாகவும் 7:00 மணிக்கு மேல் உணவுகளை தவிர்ப்பதும் உடல் எடையை குறைக்க உதவும்.
உப்பை குறைப்பதோடு அப்பளம், ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு அனைத்துமே ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதால் இவற்றை அளவாக பயன்படுத்தவும் .