அதிகம் சேமித்து வைக்க கூடாத உணவுப்பொருட்கள்... உங்க வீட்டில் இவை இருக்கா?

மிளகு, மஞ்சள், சீரகம், சோம்பு போன்ற மசாலா பொருட்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தான் சத்துக்கள் மற்றும் மருத்து குணங்களை பெற்றிருக்கும். எனவே, இவற்றை தேவைக்கு ஏற்ப, தீர்ந்தவுடன் வாங்கி பயன்படுத்தலாம்.

விலை அதிகரிப்பதை முன்னிட்டு சமையல் எண்ணெய்களை லிட்டர் கணக்கில் வாங்கி சேமித்து வைக்கும் போது, நாளடைவில் அதன் தன்மையை இழக்க நேரிடும். 1-2 லிட்டர் அளவுகளில் சேமித்து வைப்பதே சிறந்தது.

அத்தியாவசிய பொருட்களில் தவிர்க்க முடியாதது பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். வெண்ணெய், நெய், பாலாடைகட்டி போன்றவை குறுகிய ஆயுட்காலம் கொண்டவை. தேவைக்கு ஏற்ப அடிக்கடி புதிதாக வாங்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்களை தினந்தோறும் வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே அதன் ஆரோக்கிய பலன்களை பெறமுடியும்.

பேக்கேஜ் உணவுகள்... பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் புதியது கிடையாது. எனவே, இவற்றை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால் புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

விலைக்குறைவாக இருக்கும்போது, அதிகளவில் உலர் பருப்புகளை பலரும் வாங்குவர். இது ஒரு வகையில் நன்மை என்றாலும், மாதக் கணக்கில் சேமித்து வைக்கும் போது, சத்துக்கள், ஆரோக்கிய பலன்களை இழக்க நேரிடும்.

கோதுமை, சோளம், அரிசி போன்ற மாவுகளை ஸ்டாக் வைக்கும்போது, பூச்சி, புழு தொல்லைகள் அதிகரித்து சத்துகள் குறைகிறது. ஆகையால் தேவைக்கு ஏற்ப மாவை அவ்வப்போது வாங்கி பயன்படுத்துவது சிறந்ததாகும்.

பிரட்டின் ஆயுட்காலம் அதிகபட்சம் 7 நாட்கள் என்றாலும், பலரும் அதிகளவில் வாங்கி ஸ்டாக் வைக்கின்றனர். இதை முற்றிலும் தவிர்த்து தேவைக்கு ஏற்ப வாங்கி பயன்படுத்துவது சிறந்ததாகும்.