ஈரப்பதமான சருமத்திற்கு...தர்பூசணி தோலின் வெள்ளை பகுதி!

பொதுவாக நாம் தர்பூசணி பழத்தை சாப்பிட்டு, அதன் வெள்ளை நிறத் தோல் பகுதியை குப்பையில் வீசி விடுவோம்.

ஆனால், அந்தத் தோலில் தான், நம் சருமத்தை பளபளப்பாக்கும் அரிய சத்துக்கள் மறைந்துள்ளன.

தர்பூசணி தோலில் உள்ள சத்துக்கள் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.

தர்பூசணி தோலின் உட்புற வெள்ளை பகுதியை அப்படியே எடுத்து, சருமத்தில் தேய்க்கவும். இது குளிர்ச்சியை தருவதோடு, வேனல் கட்டிகள், எரிச்சலை உடனே குறைக்கும்.

தர்பூசணி தோலில் உள்ள, லைகோபீன் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை சுருக்கங்கள் இன்றி இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

சிலருக்கு தோல் வறண்டு, செதில் செதிலாக உதிரும். இதை முகத்தில் தேய்ப்பதன் மூலம், சருமம் எப்போதும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும்.

அந்தத் தோலை அரைத்து முகத்தில் பூசி வர, பருக்கள் குறையும் மற்றும் பருக்களால் வரும் வீக்கமும் வடியும்.

தர்பூசணிவெள்ளை பகுதியை சாறு எடுத்து அதனுடன், ஒரு தேக்கரண்டி தேன் அல்லது கடலை மாவு கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து கழுவினால், முகம் பிரகாசமாக மாறும்.

தர்பூசணி தோலை, ஒரு முறை சிறிய அளவில் தோலில் பூசி பார்த்து உங்களுக்கு ஒவ்வாமை இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, முழுமையாக பயன்படுத்தவும்.