தினை கீரை ரொட்டி ரெசிபி இதோ
தினை மாவு - அரை கிலோ, நெய், மிளகுத் துாள், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
முருங்கை கீரை - 1 கட்டு.
தினை மாவு, உப்பு, மிளகுத் துாள் மற்றும் காம்பு நீக்கிய முருங்கை கீரையுடன், சிறிது நீர் விட்டு பிசையவும்.
அதை, உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் தேய்க்கவும்.
தோசைக்கல் சூடானவுடன், சிறிது நெய் அல்லது எண்ணெய் விட்டு சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும்.
இரு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவைத்தெடுத்தால், சூடான மற்றும் சுவையான தினை கீரை ரொட்டி ரெடி.
குருமா, சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.