சற்று என்று மாறும் வானிலை… நெல்லி டீ குடிக்கலாமே…
நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் டீ ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பானம். மழை, வெயில் என மாறி மாறி வரும் வானிலைக்கு மிகவும் நல்லது.
வீட்டிலேயே நெல்லி டீ எப்படி தயாரிப்பது, அதன் நன்மைகள் என்ன என்ன என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் தேவை: நெல்லிக்காய் துருவல் - 2டீஸ்பூன், இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்த உடன் அதில் நெல்லிக்காய் துருவல், இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.
இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தையும், கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.