பழ ஜூஸ் அல்லது பழம்... எது ஆரோக்கியமானது?

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பழ ஜூஸ் சாப்பிடவே பலரும் விரும்புவர். இது ஆரோக்கியமானது என்றே நினைப்பர்.

ஆனால், பழங்களுக்கும், பழ ஜூஸ்களுக்கும் இடையே வித்தியாசமுள்ளது.

பழங்களிலுள்ள சர்க்கரை, வைட்டமின் போன்றவற்றை, நார்ச்சத்து கட்டுக்குள் வைக்கும்.

எனவே, பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின்கள், தாதுக்களுடன் நார்ச்சத்தும் அப்படியே கிடைக்கும்.

ஆனால், பழ ஜூஸ் தயாரிக்க அதிகளவு சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில் பழத்தை மிக்ஸியில் அடிக்கும்போது அதிலுள்ள நார்ச்சத்து இல்லாமல் போகிறது.

பழத்துடன் சர்க்கரை கலப்பதால் இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகரிக்கிறது. இதுதவிர நார்ச்சத்து வெளியேற்றப்படுவதால் சர்க்கரை தன்மையும் அதிகரிக்கிறது.

இதனை அடிக்கடி பருகினால் நாளடைவில் உடற்பருமன் ஏற்படலாம்.

எனவே, முடிந்தவரை பழ ஜூஸ்களை தவிர்த்து பழங்களை சாப்பிடுவதே நல்லது. அப்போது, அதிலுள்ள சத்துக்களும் அப்படியே கிடைக்கக்கூடும்.