குளிருக்கு இதமான பூண்டு சாதம்

தேவையானப் பொருட்கள்: வேக வைத்த சாதம் - 2 கப், வெங்காயம் - 1, நறுக்கிய கேரட், பீன்ஸ், குடமிளகாய் - 0.25 கப், வெங்காயத்தாள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2.

பூண்டு - 15 பற்கள், மிளகு துாள் - 0.50 டீஸ்பூன், சோயா சாஸ், சில்லி சாஸ் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய், வெண்ணெய் - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையானளவு.

முதலில், 10 பூண்டு பற்களை மிகவும் சிறிதாக நறுக்கவும்; மற்ற பூண்டுகளை நசுக்கி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் மற்றும் வெண்ணெயை ஊற்றி, சூடானதும் நறுக்கிய, நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும்.

பின், சிறிதாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாயை சேர்த்து கருகாமல் வதக்கவும்.

இதில், சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி, ஆறிய சாதத்தையும் போட்டு கிளறவும்.

சாதம் நன்றாக ஆறியிருப்பது அவசியம். சூடான சாதத்தை சேர்த்தால், களி போன்று ஆகிவிடும்.

அதில், நறுக்கிய வெங்காயத்தாள், ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் கமகமக்கும் பூண்டு சாதம் இப்போது ரெடி. குளிருக்கு இதமாக இருக்கும்.