வயிற்றுப்பூச்சிகளை நீக்கும் ஆடுதீண்டாப்பாளை
ஆடுதீண்டாப்பாளை இலையைக் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுவாக வாய்ப்புள்ளது.
ஆடுதீண்டாப்பாளையை நிழலில் உலர்த்தி நன்றாகப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கலாம்.
இதன் இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வு உடனே நிற்கும்.