துாக்கம் கண்களை தழுவட்டுமே!
உறக்கத்தில் உடல் தனக்கு வேண்டிய வேதிப்பொருள், ஹார்மோன்கள் உற்பத்தி செய்து, திடமான உடல், எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் போன்றவற்றை அதிகரிக்கிறது.
போதாத உறக்கத்தால் செயல்திறன் குறைபாடு, சோர்வு, மன உளைச்சல், கவனக்குறைவு எனப்பல பிரச்னை வரும்.
தூக்கமின்மைக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், மன அழுத்தம், நாளமில்லா சுரப்பி பிரச்னை, ஹார்மோன் அதிகம் அல்லது குறைவாக சுரத்தல் என பல காரணங்கள் இருக்கிறது.
சிலர் மது அருந்தி துாங்குவர். அது செயற்கையானது, ஆரோக்கியமல்ல.
துாக்கமின்மையால் பாதிக்கப்படுபவர், மருத்துவர் ஆலோசனைப்படி பக்க விளைவற்ற மாத்திரையை பழக்கப்படுத்தாமல் எடுப்பது, நல்லது.
காற்றோட்டமான, கொசு இல்லாத, இருள் அறையில், சாப்பாடு மற்றும் மொபைல், டி.வி.க்கு இரண்டு மணி நேரம் கழித்தும் துாங்கலாம். இசை கேட்கலாம்.
வயிறு நிறைய, எண்ணெய், காரம், மசாலா உணவும் மது, புகையிலை பழக்கமும் கூடாது.
உடலுக்கேற்ற படுக்கும் நிலை, சரியான தலையணை பயன்படுத்தலாம். காற்றோட்டமான, பருத்தி ஆடை அணிய வேண்டும்.