மணக்க மணக்க நெல்லிக்காய் புளிக்குழம்பு... ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் - 6, மசாலா துாள் - 4 டேபிள் ஸ்பூன், தக்காளி - 2
உப்பு, புளி, தேங்காய், தண்ணீர் - தேவையான அளவு, கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, நல்லெண்ணெய், பெருங்காய துாள், கொத்தமல்லி தழை - சிறிதளவு.
நெல்லிக்காயை வேக வைத்து விதை நீக்கி, தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காய துாள் தாளித்து, துண்டாக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
அதில், புளிக்கரைசல் ஊற்றி, உப்பு, குழம்பு மசாலா துாள், அரைத்த நெல்லிக்காய் விழுது போட்டு கொதிக்க விடவும்.
பின், நறுக்கிய கொத்தமல்லி தழை துாவி இறக்கினால், சத்தான நெல்லிக்காய் குழம்பு ரெடி.
சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.