மகிழ்ச்சி என்பது... ஜிம் ரோனின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள்!
உங்களின் வேலையை விட, உங்களின் மீது நீங்களே, அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வெற்றி என்பது சாதாரணமான செயல்களை, அசாதாரணமாக, அதேவேளையில் சிறப்பாகவும் செய்வதாகும்.
மகிழ்ச்சி என்பது எதிர்காலத்துக்காக ஒத்திவைக்கப்படுவது அல்ல; அது நிகழ்காலத்துக்காக நாம் வடிவமைக்கும் ஒன்றாகும்.
நீங்கள் விரும்பும் அனைத்தையும் பின்தொடர முயற்சிக்கும் அதேவேளையில், உங்களிடம் இருப்பதை கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
குறைவான பிரச்னைகளை விரும்புவதை விட, அதிகமான திறன்களை விரும்புங்கள்.
தேவைப்பட்டால் ஒரு வேளை உணவைத் தவிருங்கள். ஆனால், ஒரு புத்தகத்தைத் தவறவிடாதீர்கள்.
வெற்றியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை; நீங்கள் மாறும் ஆளுமையால் ஈர்க்கப்படுவதே அது.
இலக்குகளை அடைய செயல்பட்டால், அந்த இலக்குகளே உங்களை மேம்படுத்தும். நாம் உருவாக்கும் நல்ல விஷயங்கள் இறுதியில் நம்மையே உருவாக்குகின்றன.