அன்னையை போல் ஒரு தெய்வமில்லை: இன்று உலக அன்னையர் தினம்

வவயதானாலும் நம்மை என்றும் சிறு குழந்தையாக பார்க்கும் கண்கள் நம் அன்னையுடையது தான்... அரவணைப்பின் அற்புதம் ஒளிந்திருப்பதும் அன்னையின் கரங்களில் தான்…

வயதான காலத்திலும் அவர்களை அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 12) உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணியால் 1908ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

1914ல், அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் அதிகாரப்பூர்வமாக மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டில் அன்னையர் தினமாக அறிவித்தார். பின்னர் பிற நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது.

மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்து இருக்கிறது.

அவ்வகையில் அன்னையே நம் முதல் கடவுள். அன்னை இல்லையெனில் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடக்கூடாது.

இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க முடியாதவர்கள் போனில் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்.