இன்று சாய்பாபா ஸித்தி தினம்!
காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னை கூட சம்பாதிக்க முடியும். ஆனால் காலம் திரும்பாது.
மற்றவரின் குறைகளை காணும் சமயத்தில் பெருந்தன்மையுடன் மன்னியுங்கள்.
பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதையே நாமும் செய்ய முன் வர வேண்டும்.
சொல்வது யாருக்கும் எளிது. ஆனால், வாக்களித்தபடி நடப்பது மிக கடினமானது.
மக்களுக்கு சேவை செய்வதை விட பலன் தரும் பிரார்த்தனை வேறில்லை.
கடமையைச் செய்யாமல் நேரத்தை வீணாக்குபவன் பூமிப் பந்திற்கு பாரமாகி விடுவான்.