சம்மருக்கு குளிர்ச்சியை தரும் தர்பூசணியின் ஆரோக்கிய நன்மைகள் !

தர்பூசணியில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவுகிறது.

இதில், 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

தர்பூசணியில் உள்ள லைகோபின் கொழுப்பைக் குறைத்து, இதயம் தொடர்பான நோய்களை உருவாக்கும் பாதிப்பை குறைப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இதிலுள்ள லைகோபினில் ஆன்ட்டி ஆக்சிடன்ட் தன்மைகள், வயதானவர்களுக்கு உண்டாகும் பார்வை குறைபாடுகலை தவிர்க்க உதவுகிறது.

இதிலுள்ள அமினோ அமிலங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம்.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், ஈறுகளில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.

தர்பூசணியில் அதிகளவில் நிறைந்துள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் அவசியமானதாகும். மேலும், வைட்டமின் பி, பீட்டா கரோட்டின் ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன.