குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகள்
சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற பல கலர்களில் கிடைக்கும் குடை மிளகாய்கள், பெல் பெப்பர்ஸ் மற்றும் ஸ்வீட் பெப்பர்ஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
பல்வேறு நிறங்களில் கிடைப்பது போலவே பலவித ஆரோக்கிய நன்மைகளையும் குடை மிளகாய்கள் கொண்டுள்ளன. இவை உணவை கலர்ஃபுல்லாக மாற்றவும் உதவுகின்றது.
குடை மிளகாய்களில் உள்ள கரோட்டினாய்டுகளின் பண்புகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஃபிளாவனாய்ட்ஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் இதில் நிறைந்துள்ளன. இது UVA மற்றும் UVB சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
குடை மிளகாய்களில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இது உண்மையிலே ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். ஏனென்றால் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இதிலிலுள்ள பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.