பாதாம் பிசினை அதிகம் எடுத்துக்கொண்டால் பிரச்னையா?
பாதாம் பிசின், பாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான பிசின். இது, பாரம்பரியமாக பல்வேறு உணவுகள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாதாம் பிசினை ஊறவைத்து அப்படியே உட்கொள்ளலாம். மேலும் ஜிகர்தண்டா போன்று பானங்கள் மற்றும் உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.
ஒரு தேக்கரண்டி அளவு பாதாம் பிசினை, இரவு முழுவதும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில், பிசின், தண்ணீரை உறிஞ்சி, ஜெல்லி போன்ற பொருளாக விரிவடைந்திருக்கும்.
கெட்டியான பாலில், ஊறவைத்த பாதாம் பிசின், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சியையும், ஊட்டச்சத்தையும் தரும்.
மலட்டுத்தன்மை பிரச்னை உடையவர்கள் இளஞ்சூடான பசும்பாலில், பாதாம் பிசின் கலந்து தினமும் குடித்து வரலாம்.
பாதாம் பிசின் அதிகமாக சாப்பிடுவது வயிறு உப்புசம், வாயு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
எனவே, பாதாம் பிசினை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்வது போதுமானது என கூறப்படுகிறது.