ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சாலியா விதைகள்

சாலியா விதைகள் ஹலீம் விதைகள் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. கார்டன் கிரெஸ் (Garden Cress) அல்லது அலிவ் விதைகள் (Aliv seeds) எனவும் அறியப்படுகிறது.

இதில் இரும்புச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்துகள் ஆதிகம் காணப்படுகிறது.

ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மேலும் மாதவிடாய் சுழற்சியை சீராக்க பெரிதும் உதவும்.

ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இதை எடுத்துக்கொள்ளலாம்.

உடல் பருமன் உள்ளவர்கள் தங்களது எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.

முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்களுக்கு உதிர்வைத் தடுத்து முடி நன்றாக வளர செய்யும்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவாக்கும்.

ஒரு தேக்கரண்டி விதைகளைத் தண்ணீரில் அல்லது வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துப் பருகலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.

ஹலீம் விதைகளுக்கு கருப்பை சுருக்கத்தை தூண்டும் தன்மை உள்ளது என கூறப்படுவதால் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்கலாம்.