சுகமளிக்கும் சுக்கு பால்!

சுக்கு பால் செய்ய முதலில் தனியா 100 கிராம், சுக்கு 50 கிராம், 20 ஏலக்காய் ஆகிய மூன்றையும் வெறும் கடாயில் போட்டு வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

150 மில்லி நீரில், ஒரு ஸ்பூன் இந்த பவுடரைப் போட்டு, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி, பால் சர்க்கரை சேர்த்து, காலை, மாலை இரு வேளையும் குடிக்கலாம்.

இந்த சுக்கு பாலிற்கு சர்க்கரைக்கு பதில், தேன், பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

சுக்கு பால் அருந்தும் போது, வயிறு தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதோடு, சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிரகிக்கும் தன்மையும் வரும்.

தினமும் இரு வேளை சுக்கு பால் குடித்தால், சாப்பிடும் மருந்தும், உணவில் உள்ள சத்துக்களும் 100 சதவீதம் கிரகிக்கும் தன்மை ஏற்படும்.

கேன்சர் சிகிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பின்பும் தினமும் இரு வேளை சுக்கு பால் குடிப்பது நல்லது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.