எலுமிச்சம் சாறுடன் இவற்றை சேர்த்தால் இத்தனை பயன்களா?
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது.
எலுமிச்சை ஜூஸை குடிக்கும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்னையே இல்லாமல் போய்விடும்.
தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து, பருகி வந்தால் தலைவலி குணமாகும்.
கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும். எலுமிச்சை சாறு எடுத்து, தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.
எலுமிச்சை சாற்றோடு தேன் கலந்து பருகி வந்தால், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்; கல்லீரல் பலம் பெறும்.
சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து எலுமிச்சை சாறோடு, குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை சாறை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரையும்.
எலுமிச்சை சாற்றில் உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள், வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.