சுத்தமான கைகள் ஆரோக்கியமான வாழ்வை தரும்!
உணவு சாப்பிடும் முன்பும் பின்பும், உணவு தயாரிப்புக்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், இருமல் அல்லது தும்மிய பின் கழுவுவது மிகவும் அவசியம்.
குழந்தையை தொடும் முன், டயப்பர் மாற்றிய பின், நோயாளியை பராமரிக்கும் முன்பும் அதற்கு பின்பும் கழுவ வேண்டும்.
குப்பை, அழுக்கு பொருட்களை தொட்ட பின்,வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவவும்.
கழுவும் முறைகள்: கைகளை தண்ணீரில் நனைத்து சோப்பு பயன்படுத்த வேண்டும்.
உள்ளங்கை, புறங்கை, விரல்களுக்கு இடையில் நகங்களின் கீழ், பெருவிரலால் குறைந்தது 20 வினாடிகள் தேய்த்து கழுவ வேண்டும்.
சுத்தமான தண்ணீரில் கழுவி சுத்தமான துணி அல்லது காற்றில் உலர்த்த வேண்டும்.
கைகளை சரியான முறையில் கழுவுவதால் கிருமிகள், அழுக்குகள் நீக்கப் படுகிறது.
வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் தொற்று நோய் பரவலை தடுக்கிறது. உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளிடையே கிருமி பரவலை தடுக்கிறது.
தேவையற்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது. தனிநபர் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது.