தூக்கம் கண்களை தழுவட்டுமே...

மனித உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ள இயற்கை அளித்துள்ள மிகப்பெரிய மருந்து உறக்கம்.

என்ன தான் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டாலும், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலும், போதுமான அளவு உறக்கம் இல்லையென்றால், அத்தனையும் வீண் தான்.

நம்முடைய உடல், சூரியன், சந்திரன் அடிப்படையில் தான் இயங்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

அப்படிப் பார்த்தால், காலை சூரியன் உதிப்பதற்கு முன் அல்லது உதித்து அரை மணி நேரம் கழித்து, 5:30 -6:00 மணிக்குள் எழுந்து விட வேண்டும்.

இரவு சூரியன் மறைந்த பின், இரண்டு மணி நேரம் கழித்து, 7:00 - 8:00 மணிக்குள் உறங்கச் செல்ல வேண்டும். ஆனால் தற்போது அப்படி நடப்பதில்லை.

கட்டாயம் இரவு 10 மணிக்குள் உறங்க செல்வது அவசியம். காரண்ம் நம் உடல் இரவு 11:00 - 3.00 மணி வரை நல்ல உறக்கத்தில் இருக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த நேரத்தில் தான், 'ரிப்பேரிங்' எனப்படும் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் வேலை நடக்கும்.

இரவு உணவை அதிகபட்சம் ஏழரை மணிக்குள் முடித்துக் கொள்வது நல்ல உறக்கத்தை தர உதவும்.