வலியில்லாத முதுமைக்கு வழி என்ன?
வயது மூப்பால் ஏற்படும் மன அழுத்தம், மன சோர்வு, குழப்பம், பயம், பதட்டம், குற்ற உணர்வு போன்ற பல்வேறு உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
இவற்றால், முதியார்க்கு உடல் வலியாக, உபாதையாக உருமாறும் நிலைதான் சோமாட்டைசேஷன் (Somatization).
மன அழுத்தம் அதிகமாகும் போது, நம் மூளை, கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை அதிகம் சுரக்கிறது.
அச்சமயத்தில் பிறரிடம் பகிராமலோ, அழுது புலம்பி வெளிப்படுத்தாமலோ இருந்தால், உடல் அதை தசைப்பிடிப்பு, ரத்தநாள சுருக்கம், தீவிர வலியாக மாற்றிக் கொள்ளும்.
இதனால் எந்த உடல் பாதிப்பும் இன்றி வலி ஏற்படும். இந்த அறிகுறிகளுக்கு, மனநல சிகிச்சை தான் தீர்வு.
எந்தமாதிரியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பொறுத்தே சிகிச்சை முறை அமையும்.
முதலில் வயதானவர்கள் வீட்டில் இருந்தால், அவர்களை உதாசீனப்படுத்தாமல், மரியாதையுடன் நடத்த வேண்டும்.
அவர்களுடன் பேச நேரம் ஒதுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே, அவர்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இத்துடன் சில மனநல பாதிப்புகளுக்கு, மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வேண்டியிருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதை செய்தாலே, முதுமையில் வலியின்றி, சுகமாக வாழ முடியும்.