ஆரோக்கியம் தரும் புரோக்கோலி தோசை!
தேவையானப் பொருட்கள்: புரோக்கோலி துண்டுகள் - 1 கப், வெள்ளை ரவை - 1 கப், பச்சை மிளகாய் - 0.50 கப், வெங்காயம் - 1.
தயிர் - 1 கப், இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, நெய் - தேவையானளவு.
புரோக்கோலியை, உப்பு நீரில் கழுவி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, சில நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதில் தயிர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் மூடி வைக்கவும்.
பின் இந்த மாவில், பொடியாக நறுக்கிய புரோக்கோலி, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு நன்றாக கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானவுடன், சிறிது எண்ணெய் தடவி கரைத்து வைத்துள்ள மாவில் தோசை வார்க்கவும்; சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால், சுவையான புரோக்கோலி தோசை ரெடி.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி தொக்குடன் சாப்பிட சுவை அள்ளும்.