ஆரோக்கியம் தரும் கேழ்வரகு கேக்
தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பால் - தலா 0.75 கப், பேக்கிங் பவுடர் - 1.5 டீஸ்பூன், சமையல் சோடா- 0.5 டீஸ்பூன், வெனிலா எசென்ஸ் - தேவையானளவு
கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், தயிர், நெய் அல்லது வெண்ணெய், உலர் பழங்கள் - தலா 0.5 கப், உப்பு - 1 சிட்டிகை, வெல்லப்பொடி - 200 கிராம், டார்க் சாக்லேட் - சிறிதளவு.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்துாளில், கால் கப் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி ஆற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் தயிர், நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி, அதில் வெல்ல கரைசலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கேழ்வரகு மாவு, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, வெனிலா எசென்ஸ், கோகோ சேர்த்து கட்டிகள் இல்லாமல் மெதுவாக கலக்கவும்.
மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும்.
கேக் ட்ரேவில் நெய் தடவி, கோதுமை மாவை தூவி, கேக் கலவையை ஊற்றவும். அதன் மீது பொடித்த சாக்லேட், உலர்ந்த பழங்களை துாவவும்.
குக்கரில் ஒரு கப் உப்பை போட்டு உள்ளே ஒரு ஸ்டேண்ட் வைத்து, குக்கர் மூடியிலுள்ள கேஸ்கட், விசிலை கழற்றி, மிதமான தணலில் 5 நிமிடங்கள் சூடாக்கவும்.
பின் கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி, மிதமான தணலில் 30 முதல், 35 நிமிடங்கள் வேக வைக்கவும்.
கேக்கின் நடுவில் கத்தி அல்லது டூத் பிக் பயன்படுத்தி குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு கேக் ரெடி.