ஆரோக்கியத்தை தரும் ராகி, வேர்க்கடலை கொழுக்கட்டை

தேவையானப் பொருட்கள்: கேழ்வரகு மாவு - 1 கப், வெல்லம் - 1.5 கப், தேங்காய் துறுவல் - 1 கப், வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்.

வேர்க்கடலை - 0.5 கப், ஏலக்காய் துாள் - 0.5 டீஸ்பூன், நெய் - தேவையானளவு.

அடுப்பில் கடாயை வைத்து மிதமான தணலில், வேர்க்கடலை மற்றும் வெள்ளை எள்ளை போட்டு வறுக்கவும்.

பின் தேங்காய் துறுவல், வேர்க்கடலை, வெல்லம், ஏலக்காய் துாள் சேர்த்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் வென்னீர் சேர்த்து, மென்மையாக பிசைந்து, சிறு, சிறு உருண்டைகளாக்கி, லேசாக தட்டி கொள்ளவும்.

இதில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து, ரோல் அல்லது கொழுக்கட்டை வடிவில் சுருட்டிக் கொள்ளவும்.

அவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி, 15 நிமிடம் வேக வைத்தால், ஆரோக்கியமான, சுவையான ராகி, வேர்க்கடலை ரோல் அல்லது கொழுக்கட்டை ரெடி.

பாரம்பரிய சுவையுடன் கூடிய இதை குட்டீஸ்கள் விரும்பிச் சாப்பிடுவர்; ஆரோக்கியமும் மேம்படும்.