ஹெல்த்தியான சாமை மசாலா தோசை ரெசிபி

ஊற வைத்த 1 கப் சாமை, 1/4 கப் உ.பருப்பு, சிறிது வெந்தயத்தை தேவையானளவு தண்ணீர், உப்பு, 2 டே.ஸ்பூன் தினை பிளேக்ஸ் சேர்த்து மாவு பதத்துக்கு அரைத்து புளிக்க வைக்கவும்.

குக்கரில் தேங்காய் எண்ணெயை சிறிது ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து கிளறவும்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, துண்டுகளாக நறுக்கிய 2 உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீரை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

3 அல்லது 4 விசில்கள் விட்டு, ஆறியவுடன் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து விட்டால், தோசைக்கு தேவையான மசாலா ரெடி.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானவுடன், மாவை எடுத்து தோசையாக ஊற்றி, சிறிது எண்ணெய் சேர்க்கவும்.

வெந்தவுடன் மசாலாக் கலவையை சிறிது பரப்பி விட்டால் சாமை மசாலா தோசை ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவை அள்ளும்.

லிட்டில் மில்லெட் என்ற இந்த சாமையில் கால்சியம் இரும்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் மக்னீசியம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிகளவிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.