தீபாவளியை சுவையாக்கும் பாதுஷா ரெசிபி...
தீபாவளியின் ஸ்பெஷலாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் சுவைக்க தூண்டும் பாதுஷாவை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: மைதா மாவு- 1/4 கிலோ, பால்கோவா -- சிறிதளவு, வெண்ணெய் - 1 தேக்கரண்டி, சர்க்கரை - 400 கிராம், உப்பு, சமையல் சோடா -- தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் வெண்ணெய், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து, சிறு, சிறு உருண்டைகளாக்கவும்.
அதன் நடுவே, சிறிதளவு சர்க்கரை, பால்கோவாவை வைத்து, கனமாகத் தட்டவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து, பாதுஷாக்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி இறக்கவும்.
இதில் பொரித்த பாதுஷாக்களை போட்டு ஊறவைத்து எடுக்கவும். சுவையான பாதுஷா ரெடி...