ஹெபடைடிஸ் வைரசுக்கு மருத்தவ முறை அறிவோமா...

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் திசுக்களின் வீக்கம் ஆகும். பொதுவாக ஒரு வைரஸ் அதை ஏற்படுத்துகிறது.

ஹெபடைடிஸ் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களில் பல வகைகள் இருந்தாலும், ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, இ பொதுவானவை.

ஹெபடைடிஸ் ஏ, இ அசுத்தமான உணவு, தண்ணீரின் வாயிலாக பரவுகின்றன. மற்ற மூன்று வைரஸ்கள் பி, சி, டி ஆகியவை பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பரவும்.

பிரசவத்தின் போது தாயிடமிருந்து குழந்தைக்கு, பாதுகாப்பற்ற ஊசி, ரத்த மாற்றம், காயங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவற்றால் பரவுகிறது.

இதனாலேயே ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் போட வேண்டியது கட்டாயம் என கூறப்படுகிறது.

கல்லீரல் பாதிப்பு தவிர, ஹெபடைடிஸ் பி தொற்று தோல் வெடிப்பு, ரத்த சோகை, ரத்த நாளங்கள், மூட்டுகள், சிறுநீரகம் மற்றும் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நாள்பட்ட ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பிற்கு, என்டெகாவிர், டெனோபோவிர் போன்ற வாய்வழி மருந்துகள் தரப்படுகின்றன.

உணவு முறையில் மாற்றம் காரணமாக, கல்லீரல் நோய் அதிகரித்து வருவதால், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.