செரிமான பிரச்னையை தவிர்க்க இதோ பாட்டி கஷாயம் !

தேவையானப் பொருட்கள்: கொத்தமல்லி விதைகள் (தனியா), மிளகு, சீரகம் மற்றும் ஓமம் தலா 1/2 டீஸ்பூன், சுக்கு - 1/4 இன்ச் அளவு

கொத்தமல்லி, மிளகு, ஓமம், சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை பவுடராக பொடிக்கவும்.

இதை 400 மி.லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.

பாதியாக வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும்.

இரவு உணவை முடித்தவுடன் அரை மணி நேரம் கழித்து இந்த கசாயத்தை குடிக்க வேண்டும்.

இது இரைப்பை அழற்சி மற்றும் செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது.

அதேவேளையில், உடல் எடையை குறைக்கவும் இந்த பாட்டி கசாயம் உதவுகிறது.