எப்போதும் போனில் மூழ்கியுள்ள குழந்தைகளை மீட்பது எப்படி?

போன் பயன்பாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை அதிலிருந்து மீட்க, முறையான திட்டமிடலும், பொறுமையும் அவசியம்.

அவர்களைக் திட்டுவதோ அல்லது திடீரென போனைப் பறிப்பதோ, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருக்கும்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள்.

குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாடவோ, சைக்கிள் ஓட்டவோ அல்லது பூங்காவிற்கு அழைத்துச் செல்லவோ பழக்குங்கள்.

ஓவியம் வரைதல், புத்தகம் வாசித்தல், இசை, புதிர் கணக்கு, அல்லது கைவினைப் பொருட்கள் செய்வதில் அவர்களின் கவனத்தைத் திருப்புங்கள்.

முடிந்தளவு சமையல், பாத்திரங்களை கழுவுதல், வீட்டை சுத்தப்படுத்தல் போன்ற பணிகளில், குழந்தைகளை உதவுமாறு கூறி பொறுப்புகளை தரலாம்.

உறவினர்களின் திருமணம் போன்ற முக்கிய வைபவங்களை தவிர்க்காமல், குழந்தைகளை அழைத்துச்சென்று, நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் சமூகத்தொடர்பை ஏற்படுத்தவும்.