துாக்கமின்மை குழந்தைகளின் வளர்ச்சியை எப்படி பாதிக்கிறது?
குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சிக்கு, துாக்கம் மிக அவசியம்.
வயதுக்கேற்ற தூக்கம், தினமும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.
இல்லாவிட்டால், குழந்தைகளுக்கு கவனச்சிதறல், படிப்பில் சிரமம், எரிச்சல், அதிக கோபம் ஏற்படலாம்.
இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி, எதிர்காலமும் பாதிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது.
தூங்குவதற்கு 1 - 2 மணி நேரத்திற்கு முன், போன், டிவி போன்ற திரை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
தூங்கும் அறையில் சத்தமில்லாமல், வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருப்பது நல்லது.