ஆன்லைனில் எளிதாக வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி? வேட்பாளர்களுக்கு இதோ வழிமுறைகள்!

நாடு முழுவதும் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இம்மாத இறுதியில் (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது.

ஏப்.6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இம்முறை வேட்பு மனு தாக்கல் செய்ய அதற்கான அலுவலகத்தில் வேட்பாளர்கள் கூட்டம் அலைமோதும்.

எனவே, தேர்தல் கமிஷனின் சுவிதா 2.0 (Suvidha 2.0) ஆப்பில் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் ஆன்லைனிலேயே வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இதற்கு, சுவிதா 2.0 ஆப்பை வேட்பாளர்கள் பதிவிறக்கம் செய்து, தங்களின் மொபைல் எண் மற்றும் ஓடிபி எண் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

பின் வாக்காளர் அடையாள அட்டை எண் என தனிப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்து, உறுதிமொழி பத்திரத்தை நிரப்பவும். வேட்பு மனு படிவத்தின் தரவுகளை உள்ளீடு செய்யவும்.

தேவையான ஆவணங்களை பதிவேற்றி, அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்தல் அதிகாரியுடன் ஆவணங்களை நேரில் சரிபார்க்க, தேதி மற்றும் நேரம் (முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள்) தேர்வு செய்யவும்.

தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எளிதாக, விரைவாக வேட்பு மனு தாக்கல் செய்யவே ஆன்லைன் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.

அதே சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதிக்கு ஒருநாள் முன்னதாக, இணையவழி வேட்புமனு தாக்கல் வசதி மூடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.