சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி? இதோ டிப்ஸ்!

கோடையில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கல் பிரச்னை முக்கியமானது. நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியும்.

தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 5 கிராம் சமையல் உப்பு போதும் என கூறப்படுகிறது.

இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும்.

அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களை உண்ணவும்.

சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.