வெண்ணெயில் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?

உணவுப்பொருட்களில் கலப்படம் செய்வது, தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, பால் பொருட்களில் கலப்படம் இல்லாதவற்றை கண்டறிவதே சிரமம் என்ற நிலை உள்ளது.

கடையில் வாங்கி பயன்படுத்தும் வெண்ணெயில் கூட ஸ்டார்ச் கலப்படம் செய்யப்படுகிறது.

இதை கண்டறிய, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் அரை டீஸ்பூன் வெண்ணெய் போட வேண்டும். அதன் மீது 2 அல்லது 3 சொட்டு அயோடின் கரைசலை விட வேண்டும்.

கலப்படம் இல்லாத வெண்ணெய் என்றால், நிற மாற்றம் எதுவும் இருக்காது. ஆனால், கலப்படம் செய்யப்பட்டிருந்தால் நீல நிறமாக மாறி விடும்.

இதன் மூலம் ஸ்டார்ச் கலப்படம் உள்ளதா, இல்லையா என்பதை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

உணவுப் பொருட்களில் கலப்படம் இருந்தால், உணவு பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளித்தால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.