ஒற்றைத் தலைவலியை விரட்டுவது எப்படி?

'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியானது இளவயதினருக்கு வரும் நோய்.

இதன் தாக்கத்தை குறைக்க யோகா பயிற்சி செய்யலாம்.

விகிதாச்சார கணக்கு படி மாத்திரைகளால் வரும் பயனை விட யோகாவினால் வரும் பயன் அதிகமென்பது ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தியானப்பயிற்சியும் பயன் தரும் ஒன்றாகும். சரியான நேரத்தில் உணவும் உறக்கமும் தேவை.

தினமும் ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி செய்யலாம். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.

அதிகமாக கவலைப்படுவதையும் மன உளைச்சலையும் தவிர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும். இவை ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கும் தன்மையுடையது.

தலைவலி அதிகமாக இருந்தால் சில நாட்களுக்கு சாக்லெட், ஐஸ்கிரீமை தவிர்ப்பது நல்லது.