அடம் பிடிக்கும் குழந்தகைகளை அமைதிப்படுத்த சில வழிகள் இதோ!

கேட்கும் எல்லாவற்றையும் பெற்றோர்கள் வாங்கி கொடுப்பது என்ற பழக்கம் இருந்தால் மறுத்த உடனே, குழந்தைகள் கேட்டதை அடைய அடம் பிடிக்கும்.

முடிந்தவரை இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளின் அடம்பிடிக்கும் போக்கை நீக்க வேண்டும். புரியாத வயதில் இது மிகவும் முக்கியம்.

அப்போது தான் குழந்தையும் தன்னுடைய இந்தக் குணத்தை மாற்றத் தயாராக இருக்கும்.

நாம் கண்டிக்கும்போது, அடம் பிடிக்கும் குணத்தை கண்டிக்க வேண்டுமே தவிர குழந்தையை அல்ல. அவர்களுக்கும் பெற்றோர் நம்மை நேசிக்கிறார்கள், நம் நடத்தை தான் பிடிக்க வில்லை என்று தோன்ற வேண்டும்.

முதலிலிருந்தே குழந்தைகளிடம், கேட்கும் பொருட்கள் தேவையா அல்லது பிடித்தால் மட்டுமே வாங்க வேண்டுமா என்ற வேறுபாட்டைப் புரிய வைக்கவும்.

அடம்பிடிக்கும் பிள்ளையை அடுத்த முறை ஷாப்பிங் அழைத்து செல்லும் முன்பே இது தான் பட்ஜெட் என்று கூறலாம்.

பொது இடம் எனப் பதறாமல், கோபத்தைக் காட்டாமல், அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டாலே, அடம் பிடித்தாலும் பலனில்லை என புரிந்துக்கொள்வார்கள்.

நிறைவாக குழந்தைகள் சாந்தமான பின் அவர்கள் எப்படிக் கேட்டு இருக்கலாம் என்பதைப் புரிய வைக்க வேண்டும். அதுவும் அவர்களை குற்றம் சொல்லும் விதமாகச் செய்யக்கூடாது.