குழந்தைகளுக்கு சளி, இருமல் வராமல் தடுப்பது எப்படி?
புகை பிடிப்போர், சளி, இருமல், காசநோய் உள்ளவர்கள் குழந்தைகளை துாக்கி முத்தம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பரவுகிறது.
இதனை தடுக்க குழந்தைகளுக்கு முன் இருமல், தும்மல் கூடாது.
கைகளை நன்கு கழுவிய பின்பு குழந்தைகளை துாக்க வேண்டும்.
இருமல், இளைப்பு, மூச்சு விடுதலில் சிரமம், பால் குடிக்காமல் இருப்பது, உடல் சுணக்கம் ஏற்படுவது போல் இருந்தால் டாக்டரை அணுக வேண்டும்.
பிறந்தது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடிய ப்ளு தடுப்பூசி, நிமோனியா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவ முறையில் துாதுவளை, மிளகு, இஞ்சி சாறு சிறிதளவு கொடுக்கலாம்.
இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி சளி, இருமல், காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.