நிலச்சரிவை தடுக்க முடியுமா?

நிலச்சரிவு என்பது இயற்கை அல்லது மனித நடவடிக்கை காரணமாக மண், பாறை பகுதிகள் வேகமாக கீழ்நோக்கி சரிவதை குறிக்கிறது.

பொதுவாக நிலச்சரிவு என்பது புயல், காற்று, வெள்ளம், எரிமலை, பூகம்பத்தின் விளைவாக ஏற்படுகிறது.

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை, ஆரவல்லி மலைத் தொடர், வடமேற்கு, வடகிழக்கு, இமயமலைகள் போன்ற பகுதிகள் அதிக அளவில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாக உள்ளன.

தமிழகத்தை பொறுத்த வரை நீலகிரி மாவட்டம் அதிலும் குறிப்பாக ஊட்டி, மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக நிலச்சரிவு ஏற்படக் கூடும்.

மலைச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள இடங்களில் உறுதியான சிமெண்ட் தடுப்புகளை அமைப்பதன் மூலம் நிலச்சரிவை ஓரளவுக்கு தடுக்க முடியும்.

மலை பகுதிகளில் நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து குழாய்கள் மூலமாக அந்த நீரை வெளியேற்றுவதன் மூலமும் நிலச்சரிவை தடுக்க முடியும்.

மலைச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை ஆராய்ந்து அதிக அளவில் மரங்கள், செடிகள் மற்றும் புல்வகைகளையையும் நடவேண்டும்.

இது போன்றவற்றை முயற்சித்தால் மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவை அங்கு தடுக்க முடியும்.